வரவேற்பு !





 (வி.ரி.சகாதேவராஜா)


தம்பிலுவில் கிராமத்தில் முதலாவது மருத்துவத் துறை பேராசிரியரான கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் குடும்ப நலத்துறை பேராசிரியர் வைத்திய கலாநிதி டாக்டர் கந்தசாமி அருளானந்தம் அவர்களுக்கு நேற்று பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தம்பிலுவில் விநாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் அதன் பணிப்பாளர் கண. இராஜரத்தினம் கண்ணன் தலைமையில் இவ் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அண்மையில்
குடும்ப நலத் துறை பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற  தம்பிலுவிலைச் சேர்ந்த டாக்டர் கந்தசாமி அருளானந்தம் வரவேற்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

குருகுல மாணவர்களும் கலந்து கொண்டனர்.