திருக்கோவில்,வைத்தியசாலை! உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்




 

(வி.ரி. சகாதேவராஜா)

 

கடந்த ஒரு வார காலமாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஸ்ப்பினால் மூடி கிடக்கின்றது.

 இதனால் அந்த பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் தமிழ்மக்கள் வைத்திய சேவையின்றி பாதிக்கப்பட்டுள்ளார்கள் . அவசர சிகிச்சைகளுக்காக அப்பிரதேச மக்கள்  காலநேரபணம் செலவுசெய்து அக்கரைப்பற்று வைத்திய சாலைக்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர்.

ஒரு வாரத்துக்கு முன்பு மரதன் ஓடிய ஒரு மாணவனின் இறப்பைத் தொடர்ந்து அங்கு வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது தெரிந்ததே. அதன் போது வைத்தியசாலை கண்ணாடிகள் பெயர் பலகைகள் உடைக்கப்பட்டதும் தெரிந்தததே.

 இதனை அடுத்து தங்களுக்கு பாதுகாப்பின்மை என்று கூறி வைத்தியர்கள் வெளியேறினார்கள்.

 அதனால் அன்றிலிருந்து இன்று(18) திங்கட்கிழமை வரை ஒரு வார காலமாக வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. அங்கே எவ்விதமான வைத்திய சேவைகளும் இடம் பெறவில்லை.

 இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் பாம்புக் கடி தூக்கிட்டு தற்கொலை முயற்சி போன்ற பல நோயாளிகள் வந்தும் அதை நேரடியாக அக்கரைப்பற்று ஆதரவைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது.

மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் கடந்த ஒரு வாரமாக வைத்திய சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

எது எப்படி இருப்பினும் இன்றைய தினம்(18)  ஒரு முழுமையான கலந்துரையாடல் இடம் பெற்று வைத்தியசாலை திறக்கப்படுவதற்கான சாதகமான அறிகுறி தென்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன்  அறிவித்தார்.