நூருல் ஹுதா உமர்
மனித அபிவிருத்தி தாபனமும் பெண்கள் ஒத்துழைப்பு முன்னனியும் இணைந்து கல்முனை இஸ்லாமபாத் பொது கட்டிடத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வினை இன்று நடத்தியது.
வேள்வி பெண்கள் அமைப்பின் உப தலைவி எம். றிலீபா பேகம் தலைமைல் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பெண்கள் ஒத்துழைப்பு முன்னனியின் செயலாளரும், மனித அபிவிருத்தி தாபன நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளருமாகிய திருமதி எஸ். லோகேஷ்வரி கலந்து கொண்டு பிரதான உரை வழங்கினர்.
பெண்கள் அரசியல், சமூக, கலாச்சார மற்றும் அபிவிருத்தி போன்றவற்றில் சமத்துவமாக செயற்படுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் அதற்கு இந்தியாவில் கேரளா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பஞ்சாயத்து முறையை பின்பற்ற வேண்டும் என்ற விளக்க உரையினை வழங்கினார்.
இந்நிகழ்வில் மனித அபிவிருத்தி தபான உதவி இணைப்பாளர் எம். ஐ. றியால், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தார்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் , பெண்கள் அமைப்புகள், சிவில் அமைப்புகளின், இளைஞர் அமைப்புகள் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.
Post a Comment
Post a Comment