ஒரு தொகுதி ஈத்தம் பழங்கள் அன்பளிப்பு!




 


நூருல் ஹுதா உமர் 


சம்மாந்துறை சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் ஸ்தாபகரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான அஸ்மி யாஸீன் அவர்கள் பிராந்தியத்தில் பல்வேறு சமூக நல உதவிகளை செய்து வருகின்றார். அதன் அடிப்படையில் புனித ரமழானை முன்னிட்டு இன்று 2024.03.26 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்விசாரா ஊழியர்களின் அமைப்பான நவ்ஸ் எனும் அமைப்புக்கு ஒரு தொகுதி ஈத்தம் பழங்கள் அன்பளிப்புச் செய்தார்.

சமூக செயற்பாட்டாளர் அஸ்மி யாஸீன் அவர்களது சார்பில் அமைப்பின் முக்கியஸ்தர்களான சம்மாந்துறை தேசிய பாடசாலையின் பிரதி அதிபரும் அமைப்பின் ஆலோசகருமான எம்.சி. பர்ஷான் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் அமைப்பாளர் ஏ. அபூபக்கர் ஆகியோர் குறித்த ஈத்தம் பழங்களை நவ்ஸ் அமைப்பின் தலைவர் எம்.ஏ. றிபாயிஸ் முகம்மட் ஊடாக ஊழியர்களுக்கு வழங்கி வைத்தனர்.