நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் ஆதார வைத்திய சாலையில் நீண்ட நாட்களாக பல்வேறு இட நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குறைந்த வசதிகளுடனும் இயங்கி வந்த ஆண்கள் விடுதி தற்பொழுது புனர்நிர்மாணம் செய்யப்பட்ட புதிய இடத்தில் இயங்கி வருகின்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி எஸ். ஆர். இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம். பி.அப்துல் வாஜித் அவர்களின் நேரடி மேற்பார்வையிலும் விடுதியின் பொறுப்புத் தாதிய உத்தியோகத்தர் திருமதி எம். வை. பாயிகா அவர்களின் நேரடி வழிகாட்டலிலும் இந்நிகழ்வு இடம் பெற்றது.
இப்புனர்நிரமாண வேலையானது வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர் எம்.என்.எம். யூசுப், வைத்தியசாலையின் PDO திரு கே. எம்.றபீக், அல் அஸ்ரக்கியன் 98 அமைப்பின் உறுப்பினர்கள், ரெயின்போ பிரிண்டர்ஸ் உரிமையாளர், மற்றும் எம். வை. பாரிஸ், நலன்விரும்பிகள், வைத்தியர்கள், தாதியர்கள் என பல்வேறு தரப்பினரின் பொருளாதார மற்றும் சரீர உதவியுடனும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர், ஊழியர்களின் முழுமையான பங்களிப்புடனும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment