அக்கரைப்பற்று, அஸ்ஸிராஜ் பாடசாலைக்கு சேதம் விளைவித்து, மாணவர்களைத் தாக்கிய சந்தேக நபர்கள் மூவருக்கு விளக்கமறியல்









அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயத்தில், அண்மையில் விளையாட்டுப் போட்டி  இடம் பெற்றது. அன்றைய தினம் விளையாட்டுக்களை, கண்டு களிக்க வந்த, பழைய மாணவர்கள் சிலர் குறித்த கல்லுரி  மாணவர்கள் சிலரை, கத்தியைக் கொண்டு தாக்கி இருந்ததோடு அங்குள்ள கேட் மற்றும் கண்ணாடி போன்றவற்றிற்கும் சேதம விளைவித்திருந்தார்கள்.

குறிப்பிட்ட இந்த சந்தேகம் அவர்கள் ஒன்பது பேரில் மூன்று பேர் இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் குறித்த மூவரையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கம் அளிக்குமாறு அக்கரைப்பற்று நீதிபதி ஏ.சி ரிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த சந்தேக நபர்கள் சார்பில், 

சட்டத்தரணிகள் சமீம், ஜனிர் ரிஸ்வான் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்