(எஸ்.அஷ்ரப்கான்)
பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில், தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீனின் தலைமையில் இன்று (19.03.2024) ஆம் திகதி பல்கலைக்கழக முற்றலில் வேலைநிறுத்தத்துடன் கூடிய பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக ஊழியர்களில் குறிப்பிட்ட தரப்பினர் இடையிடையே வேலைநிறுத்தத்தில் குதிப்பதால் மாணவர்களின் கல்விநிலை உட்பட பல்வேறு செயற்பாடுகள் மந்தகேதியிலேயே இடம்பெறுகின்றன.
பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமிலின் வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில்
நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியால் சடுதியாக அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்ய முடியாத நிலையில், நீண்டகால சம்பள முரண்பாடுகளை சீர்செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்தும் உதாசீனம் செய்யப்படுவதை வெளிக்கொணருமுகமாகவும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலுமுள்ள கல்விசாரா ஊழியர்கள் இவ்வாறான முழுநாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்வதாக இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
Post a Comment
Post a Comment