நூருல் ஹுதா உமர்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நிந்தவூர் ஆதார வைத்தியசாலை (08) பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.பி.அப்துல் வாஜித் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
"பலம் மிக்க பெண்கள் நாட்டின் வளம்" பெண்கள் சமுதாயத்தில் முதலீடு செய்யுங்கள் முன்னேற்றத்தை துரிதப்படுத்துங்கள் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment