புதிய நிர்வாகிகள் தெரிவு!




 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட அரச சேவைகள் ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் 17 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிதியத்தின் தலைவர் அல் ஹாஜ் ஐ. அப்துல் குத்தூஸ் அவர்களது தலைமையில் 202403.09 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் திருமதி என்.வி.எம். லரீப் அவர்களும் சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட ஓய்வூதிய நிதியத்தின் செயலாளர் அல் ஹாஜ் ஏ. உதுமாலெப்பை அவர்களும் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்ஸான் அவர்களும் CMSO ஏ.சி. முகம்மட் அவர்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ. சாஜிதா அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது நிதியத்திலிருந்து மரணித்த அங்கந்தினருக்காக துஆ பிராத்தனை இடம்பெற்றது. பின்னர் நிகழ்வின் தலைவர் முன்னெடுக்கப்படவேண்டிய பல்வேறு திட்டங்கள் தொடர்பில் தனது முன்மொழிவை முன்வைத்தார். இங்கு பிரதம அதிதி மற்றும் சிறப்பு அதிதிகளும் உரையாற்றினர்.
நிகழ்வில் நிதியத்தில் 15 வருடங்களுக்கு மேல் பணியாற்றி ஓய்வுபெற்ற எம்.ஐ.ஏ. ஜப்பார் அவர்கள் கௌரவிக்கப்பட்டு அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

இறுதியாக இடம்பெற்ற நிர்வாகிகள் தெரிவின்போது தலைவராக எம்.எம்.எம். இஸ்மாயில் அவர்களும் செயலாளராக ஏ.எல். மீராலெப்பை அவர்களும் பொருளாளராக ஐ.எல். ஹம்ஸா அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். உப தலைவராக யூ.எல்.ஏ. அஸீஸ் அவர்களும் உபசெயலாளராக இசட். ஏ. லத்தீப் அவர்களும் நிர்வாக உத்தியோகத்தர்களாக ஏ.எம். றசீட் மற்றும் எம்.சி. ஜமால்டீன் ஆகியோரும் இசட்.ஏ. முனீர் கணக்கு பரிசோதகராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இங்கு ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தில் அங்கம் வகிப்பதிலுள்ள நன்மைகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டு நிதியத்தில் இதுவரை இணைந்து கொள்ளாதவர்களை புதிய நிர்வாகம் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.