நூருல் ஹுதா உமர்
அகில இலங்கை YMMA பேரவையின் ஏற்பாட்டில் பொத்துவில் அக்/ அஸ் -
ஸாதிக் வித்தியாலய மாணவர்கள் 450 பேருக்கு இன்று (16) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ.சி. சிஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி நிகழ்வினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட YMMAகளின் ஒன்றியச் செயலாளரும், YMMA பாலமுனை தலைவருமான ஐ. அஹமட் ஸிறாஜ், சிவேட் சிறிலங்கா தலைவர் எஸ்.எல்.எம். அப்துல் காதர், லங்கா தமிழ் பிரதானி ஆசிரியர் பௌசான் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அகில இலங்கை YMMA பேரவையின் அனர்த்த பிரிவின் ஏற்பாட்டில் இப்பாடசாலையின் கல்வி கற்கும் 450
மாணவர்களுக்கு இன்றைய தினம் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment