(வி.ரி. சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர் தினவிழா பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்றது.
மகளிர் தின விழாவின் மூன்றாவது நிகழ்வாக மகளிருக்கான "மனைப் பொருளாதார முகாமைத்துவ செயலமர்வானது" நேற்று முன்தினம் (2024.03.09) பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் வளவாளர்களாக தங்கவேல் சக்திவேல் (முதன்மை பயிற்றுவிப்பாளர், நிபுணத்துவ ஆலோசகர் மற்றும் திருமதி சக்தீஸ்வரி சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு செயலமர்வினை சிறப்பாக நடாத்தியிருந்தனர்.
இந்த செயலமர்வில் பிரதேச செயலக பிரிவிலிருந்து திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட 35 பயனாளிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வின் மூலம் தாம் நல்ல ஆலோசனைகளையும் சிறந்த அனுபவத்தையும் பெற்றுக் கொண்டதாக பயனாளிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Post a Comment