பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் இன்று(13) அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது.
அனுராதபுரம் - சாலியவெவ, 15ஆம் மைல் கல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த சொகுசு ஜீப் வாகனம், முன்னால் பயணித்த உழவு இயந்திரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கோ அவருடன் பயணித்தவர்களுக்கோ காயமேற்படவில்லை.
காயமடைந்த உழவு இயந்திரத்தின் சாரதி புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment