முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருந்து இறக்குமதி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளையடுத்து வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்ற உத்தரவின்பேரில் அழைக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (சிஐடி) அழைக்கப்பட்டார்.
சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சின் பொறுப்பில் இருந்த போது அரச வைத்தியசாலைகளுக்கு புற்றுநோய்க்கான போலி மருந்துகளை விநியோகித்து பல மில்லியன் டொலர்கள் மோசடி செய்தமை தொடர்பில் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.
Post a Comment
Post a Comment