சந்திப்பு !





 நூருல் ஹுதா உமர்


அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களுக்கும் அம்பாறை நகர ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பு அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை இல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரதேசங்களில் நிலவும் சுகாதார பிரச்சினைகள் அவற்றை நிவர்த்திக்க ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள், சுகாதார பிரச்சினைகளை தீர்க்க ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் கடந்த காலங்களில் ஆற்றிய சேவைகள் தொடர்பாக நீண்ட நேர கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது அம்பாறை பிராந்திய ஊடகவியலாளர்கள் சுகாதார சேவைகள் பணிமனையின் சகல நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும், மக்களுக்கும்- சுகாதார துறைக்கும் உள்ள இடைவெளியை குறைக்க தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளித்தனர். ஊடகவியலாளர்களுக்கு சுகாதாரத்துறை இடைவெளிகள், வளப்பங்கீடு கள், வள பற்றாக்குறை போன்ற பல விடயங்களையும் விளக்கினார். அத்துடன் சுகாதாரத்துறை அறிவூட்டல் நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.