புனர்வாழ்வு நிலையத்தில், பதற்றம்





 பொலன்னறுவை - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் பத்து கைதிகளும் ஒரு ராணுவ வீரரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்று (04) அதிகாலை, சோமாவதி யாத்திரைக்காக வந்த பேருந்தை வழிமறித்து தப்பிச் சென்ற கைதிகள் குழுவொன்று, வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஐம்பதாயிரம் ரூபா பணம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 34 கைதிகளை வெலிகந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதற்கு முன்னரும் பல தடவைகள் உணவுப் பிரச்சினை மற்றும் பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு மோதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.