( வி.ரி.சகாதேவராஜா)
அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாரிய உடைப்பெடுத்த குளக்கட்டை அம்பாறை மாவட்ட
அரச அதிபர் சிந்தக அபேவிக்கிரம நேரடியாக சென்று பார்வையிட்டார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள பாலக்கரச்சி தாமரைகேணி குளக்கட்டில் பாரிய உடைவு ஏற்பட்டிருந்தது.
பாலக்கரைச்சி தாமரைகேணி விவசாய அமைப்பு திருக்கோவில் பிரதேச செயலாளர் .தங்கையா கஜேந்திரனிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று அவர் நேற்று முன்தினம் விஜயம் செய்தார்.
இதன் போது விவசாயிகளினால் குளத்தினை புனர்நிர்மாணம் செய்யக்கோரி மகஜர் ஒன்றும் மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டது .
Post a Comment
Post a Comment