Ameer Mohamed,இற்கு வாழ்த்துக்கள்!
1985 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் 39 வருட சமுக சேவைக்காக கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்.
அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த 2023.11.28 ஆம் திகதி Colombo BMICH இல் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற நிகழ்வில் சர்வதேச பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தேறியது.
சுகயீனமுற்று நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த காரணத்தினால் எனக்கான விருது என்னைத் தேடி வந்துள்ளது.
எனது சமுக சேவையானது சிறு பிராயத்திலிருந்து தொடங்கினாலும் அதி தீவிரமாக யுத்தகாலமான 1988 ஆம் ஆண்டே எனது பாடசாலைக் காலத்தைக் காணலாம்.
இதனால் முழு பிரிவிலும் மூதலாம் இடத்திலும் அனைத்துப் பாடங்களிலும் 100 புள்ளிகளைப் பெற்றும் வந்த வேளை சமுக அவலத்திற்காக ஒரு வருட பாடசாலை வாழ்க்கையையும் இழந்தேன்.
இரண்டே மாத இடைவெளியை ஏற்றுக் கொள்ளாத அந்த Sectional Head எனது அன்பின் காரணமாகவோ தெரியாது பரீட்சைக்கு அனுமதிக்க மறுத்து விட்டு என் முன்னே அழுது விட்டார்.
மீண்டும் அடுத்த வருடம் இணைந்தே திறமையாக படித்து முன்னேறி அல்ஹம்துலில்லாஹ் இன்று நல்லதொரு நிலையில் இருக்கின்றேன்.
மீண்டும் முயன்று South Eastern University of Srilanka வில் எனது Degree ஐயும் முடித்தேன்.
மட்டுமன்றி
யுத்தகால மனிதாபிமானப் பணிகள்.
2004 ஆம் ஆண்டின் சுனாமி உள்கட்டுமானப் பணிகள் மற்றும் மனிதாபிமான பணிகள்.
கொடிய கொரோணா கால விழிப்புணர்வுப் பணிகள்,நிவாரணப்பணிகள்.
கல்விப்பணிகள்.
சுகாதார உதவிப் பணிகள்.
Welfare Council of Srilanka மூலமான நூற்றுக்கணக்கான பல்துறைசார் சமுகசேவைகள்.
தேசிய மற்றும் சர்வதேச ரீதியான இலக்கிய பணிகள்.
மற்றும்..........
முதலில் என்னைப் படைத்து பரிபாலித்து பாதுகாக்கும் இறைவனுக்கும்
என் குடும்பத்தினர்களுக்கும்.
தோளோடு தோள் கொடுக்கும் தோழமைகளுக்கும்
நன்றிகள்
Post a Comment
Post a Comment