அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமாக கௌரவ A,C.றிஸ்வான் அவர்கள் கடந்த 2024.01.01 கடமையேற்றதன் பின்பு அக்கரைப்பற்று நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருப்பெற்றுள்ளன.
நீதிமன்றின் நீண்ட காலமாக ஓட்டடை ஒடிசல் விழுந்து காணப்பட்டிருந்த வாகனத் தரிப்பிடம் சுமார் பத்து இலட்சம் ரூபா செலவில், புணரமைக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற, திறந்த நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கான,புதிய திரைச்சீலை வசதிகள், புதிய சிறைக்கூண்டு, போன்றவையும், இலட்சக் கணக்கான ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று நீதின்ற நுழைவாயிலில், இதுகாறும் இருந்து வந்த பெயர்ப் பலகை அகற்றப்பட்டு, புத்தம் புதிய நவீன பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான நிதி வசதிகளை, அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் பிரதேச சபைகள் ஒதுக்கியிருந்தன.
இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம் இன்றைய தினம் அக்கரைப்பற்று, மாவட்ட, நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிபதியுமான றிஸ்வான் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அதேவேளையில், மேலதிக மாவட்ட நீதிபதியும், கௌரவ நீதிபதியுமாகிய திருமதி தெசீபா ரஜீவன் புதிய பெயர்பலகையினை திறந்து திரை நீக்கம் செய்து வைத்தார்.
அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க மூத்த துணைத் தலைவர், சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எல்.ஏ. றசீத் அவர்கள், அங்குரார்ப்பண உரையினை நிகழ்த்தும் போது, பல தசாப்தகாலமாக புணரமைக்கப்படாமல் காணப்பட்டிருந்த, அக்கரைப்பற்று நீதிமன்று,கடந்த 2024.01.01 கௌரவ நீதிபதியாக ஏ.சி. றிஸ்வான் அவர்கள் கடமையேற்றதன் பின்பு, பல்வேறுபட்ட மாற்றங்களகை் கண்டு வருகின்றது என்பதாகத் தெரிவித்தார்.அக்கரைப்பற்று நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருப்பெற்றுள்ளன என்பதுடன், அதற்கு ஒத்துழைப்பு நல்கிய உள்ளுராட்சிமன்றங்களக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான கௌரவ ஏ.சி. றிஸ்வான் அவர்கள் உரைநிகழ்த்தும் போது, குறுகிய காலத்தில் இப் பணிகளைச் செய்து முடிக்க அரும்பணியாற்றிய, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் பிரதேச சபைகளுக்கும், களப்பணியில் ஈடுபட்ட சமூதாயஞ்சார் பணியாளர்களுக்கும், நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கும், மிகக் குறுகிய காலத்தில் சிறப்பான திறப்பு விழாவினைச் செய்து கொடுத்த அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வில் அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்கள்,கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் றயிசுல் ஹாதி, நீதிமன்ற உத்தியோகத்தர்கள், சமூதாய சீர்திருத்த உத்தியோகத்தர்கள் ஆகியோர்கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment
Post a Comment