ஏறாவூர் சாதுலியா பாலர் பாடசாலை விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்......,
ஏறாவூர் சாதுலியா பாலர் பாடசாலையின் விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் - பள்ளிவாசல் தலைவரும் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர்
ஏ. எஸ் .எம். இர்ஷாத் தலைமையில் ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலய பிரதான மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்கள
ப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செய்யிது அலிசாகிர் மௌலானா அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
அத்துடன் கௌரவ அதிதியாக ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர்
எம். எஸ். நழீம் அவர்களும் விசேட அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலையத்தின் முன்பள்ளிக்கான முன்னாள் உதவிக்கல்வி பணிப்பாளர் எம். எச் .எம் .நசீர் மற்றும் ஏறாவூர் கோட்ட பாலர் பாடசாலையின் இணைப்பாளர்
சக்கினா பௌசூல் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நிகழ்வை அலங்கரித்ததுடன் அதிதிகளால் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியைகள்
பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Post a Comment
Post a Comment