புதிய வைத்தியபீட மாணவர்கள் வரவேற்பு




 


(வி.ரி. சகாதேவராஜா)


கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய வைத்தியபீட மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு இன்று(5) திங்கட்கிழமை பல்கலைக்கழக வைத்தியபீடத்தில் நடைபெற இருக்கிறது.

 வைத்திய பீட பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் தலைமையில் நிகழ்வு இடம்பெற இருக்கிறது.

 கிழக்கு பல்கலைக்கழகத்தின் 18 வது வைத்திய அணி இதுவாகும். இதில் 115 மாணவர்கள் புதிதாக இணைந்திருக்கிறார்கள்.

கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வ கனகசிங்கம் முன்னிலையில் புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.