விஷ வாயுவை சுவாசித்த மீனவர் உயிரிழப்பு – எழுவர் வைத்தியசாலையில்





 துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகொன்றின் மீன் சேகரிப்பு தொட்டிக்குள் உருவாகியதாகக் கூறப்படும் விஷ வாயுவை சுவாசித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்திலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

இந்நிலையில் விஷ வாயுவினால் பாதிக்கப்பட்ட 8 மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 

இதையடத்து ஏனைய 7 மீனவர்களும்  பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்