சைக்கிள் ஓட்டப் போட்டியில் சாதனை படைத்தார் காத்தான்குடி உனைஸ் ஹாஜி
இன்று (09) காலை பொத்துவில் அறுகம்பை கடற்கரை தொடக்கம் பாசிக்குடா வரை பிரமாண்டமாக நடைபெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டியில் காத்தான்குடி. Ultra Distributors (PVT) LTD அல்ஹாஜ் A.M. உனைஸ் முதலாவது இடத்தைப் பெற்று காத்தான்குடி மண்ணுக்கே பெருமை சேர்த்துள்ளார்.
156 கிலோமீட்டர் தூரத்தினை நான்கு மணித்தியாலம் நாற்பது நிமிடத்தில் ஓடி முடித்துள்ளார்.
இப்போட்டி நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நடைபெற்றது. இந்த வயதில் இப்படியான சாதனை படைத்துள்ள இந்த சாதனையாளரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்
காத்தான்குடியின் பிரபல வர்த்தகரான இவர் சுமார் மூன்று மாதகாலமாக கடும் பயிற்ச்சி எடுத்தே இச்சாதனையை படைத்துள்ளார்.
இவருக்கு இன்று காத்தான்குடியில் வரவேற்பளிக்கப்பட்டது.
Noordeen Msm
Post a Comment
Post a Comment