நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்கங்களினால் பயிர்கள், சொத்துக்கள், உடைமைகள் மற்றும் தொழில் நிலையங்கள் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளை குறைத்தல் மற்றும் காயமடைதல், உயிராபத்துக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான முன்னாயத்தத் திட்டத்தினை வெற்றிகரமான தாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லல் தொடர்பான கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.பார்த்திபன், நிர்வாக கிராம உத்தியோகத்தர், காரைதீவு பிரதேச சபை செயலாளர், வனஜீவராசிகள் திணைக்களத்தின் வளத்தாப்பிட்டி அலுவலக பொறுப்பதிகாரி, நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர், காரைதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், காரைதீவு மற்றும் சாய்ந்தமருது கமநல சேவைகள் நிலைய உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர், கிராம உத்தியோகத்தர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ இளைஞர் குழுவின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment