Update:
குறித்த பெண் சட்டத்தரணியும் அவரது கணவரும் மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியுள்ளனர்.
#News:
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க அங்க த்தவரான பெண் ஒருவரையும் அவரது கணவரையும், காந்தி பூங்காவுக்கு முன்னால் உள்ள அலுவலகத்தில் வைத்து தாக்கிய சந்தேக நபர்களை, இந்த மாதம் 19 ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற கெளரவ நீதிபதி ஜனாப் ஹம்சா அவர்கள் கடந்த 6 ந் திகதி கட்டளை பிறப்பித்தார்.
குறித்த சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில், கடந்த செவ்வாய்க் கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
சட்டத்தரணியின் காரியாலயத்தில் சட்ட ஆலோசனை பெறச் சென்ற மட்டக்களப்பை சேர்ந்த சந்தேக நபரான, கோகுல் என்பவரும், இன்னுமொரு பெண் சந்தேக நபரும் இந்தத் தாக்குதலைத் தொடுத்தவர்கள் ஆவர்.
குறித்த பெண் சட்டத்தரணியும் அவரது கணவரும் மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
Post a Comment
Post a Comment