வெற்றுக் கொள்கலன்கள் சேகரிக்கும் பணி வெற்றி*




 


(வி.ரி. சகாதேவராஜா)

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதேசங்களில் காணப்படும் வெற்றுக் கொள்கலன்களை அகற்றும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா  வில்வரத்னம் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2024.02.09)  இடம்பெற்றது.

இதன்போது கோட்டைக்கல்லாறு பொதுவிளையாட்டு மைதானம் மற்றும் கோட்டைக்கல்லாறு கிராமத்தின் நீரேந்தும் பகுதிகளை அண்டிய பிரதேசங்கள் என்பன பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  இளைஞர் கழக உறுப்பினர்களின் பங்களிப்புடன் சுத்தம் செய்யப்பட்டது.

பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஆகியோரின்  ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வானது  கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் களுதாவளை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோரின்  பங்கேற்றப்புடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.