கல்விச் சேவையிலிருந்து, ஓய்வு





 (வி.ரி. சகாதேவராஜா)


கல்முனை தமிழ்ப் பிரிவு கோட்டக் கல்வி பணிப்பாளர் சண்முகம் சரவணமுத்து தனது 36 வருட கல்வி சேவையில் இருந்து இன்று(29) வியாழக்கிழமை ஓய்வு பெற்றார்.

 இன்று 29ஆம் தேதி கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் அவருக்கான கௌரவம் வழங்கப்பட்டது.


பாண்டிருப்பைச் சேர்ந்த சேர்ந்த சரவணமுத்து  1988 இல் நியமனம் பெற்று மத்திய முகாம் நாலாம் கொலனி வாணி வித்தியாலயத்தில் கற்பித்து பின்னர் அன்னமலை ஸ்ரீ சக்தி வித்தியாலயம் நாலாம் கொலனி வாணி வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராக இருந்து பின்னர் நாவிதன்வெளி கோட்ட கல்வி பணிப்பாளராக நான்கு வருடமும் இறுதியாக கல்முனை தமிழ் பிரிவு கோட்டக் கல்வி பணிப்பாளராக 5 வருடமும் கடமையாற்றி நேற்றைய தினம் ஓய்வுபெற்றார் .

நாளை முதலாம் தேதி அவரது அறுபதாவது பிறந்த தினம் .
மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் 91 /92 அணியைச் சேர்ந்த இவரது புலன நண்பர்களின் ஒன்று கூடலும் இடம்பெற இருக்கிறது.