(வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பால்நிலை சமத்துவம் மற்றும் உளநலன் , உளவியல் நடத்தை சார் அணுகுமுறைகள் தொடர்பான செயலமர்வு நேற்று நடைபெற்றது.
அமைப்பின் தலைவி திருமதி கலைவாணி தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்
நாவிதன்வெளி பிரதேச செயலக உளநல ஆற்றுப்படுத்துனர் ஏ.சுதர்சன் விளக்கவுரை யாற்றினார்.
இதில் அமைப்பின் இணைப்பாளர் மற்றும் கள உத்தியோகத்தர் ,திட்ட இணைப்பாளர் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் முன் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment