தேசப்பற்றுள்ள முஸ்லிம் புதல்வர்களை சுதந்திர போராட்ட வீரர்களாக அறிவிக்கப்பட வேண்டும் : ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான்.
நூருல் ஹுதா உமர்
தனது தாய் நாட்டின் சுதந்திரத்தை வேண்டி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடியதற்காக அக்காலத்தில் ஏகாதிபத்தியங்களால் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட முஸ்லிம் தேசபக்தர்களான திருகோணமலை சேகு தீதி, பீர்முஹம்மது மௌலவி, சலாம் உடையார் போன்றவர்களும் மட்டக்களப்பை சேர்ந்த மீரா ஹுசைன் காரியப்பர், ஹுசைன் லெப்பை உதுமா லெப்பை ஆகியோரும், அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த அபுபக்கர் ஈஸா, அனிஸ் லெப்பை ஆகியோரும் இருக்கத்தக்கதாக ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சியில் பங்கு பற்றிய தேசப்பற்றுள்ள சிங்கள பூமிபுத்திரர்களை மட்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வர்த்தமானி மூலம் ஹீரோவாக அறிவிக்கப்பட்ட மையானது அவரது நயவஞ்சக தனத்தை காட்டியது என ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் தெரிவித்தார்.
சமூகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அவர்கள் செய்த தியாகங்கள் எதுவுமில்லை. மேலும், முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாத்திற்காக அக்கால சமயத் தலைவர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் ஆங்கிலேயர்களின் உலக புவிசார் அரசியல் நலன்களுக்கான ஒப்பந்த சித்தாந்தத்தை நிறைவேற்றவில்லை மாறாக உஸ்மானிய ஆட்சியின் ஆசீர்வாதத்துடன் தான் இருந்ததே ஒளிய ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து உஸ்மானிய ஆட்சியை கவிழ்க்க சதி செய்த துரோகிகளுடன் அல்ல என்பதை இன்றைய மத தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Post a Comment
Post a Comment