பொலிவேரியன் கிராமத்தில் வீடு ஒன்று தீப்பற்றி எரிந்தது





 (எஸ்.அஷ்ரப்கான்)


அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் மீள குடியமர்ந்த பிரதேச  சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள வீடொன்றில் இன்று (25) காலை திடீரென தீப்பற்றி எரிந்தமையால் வீட்டில் இருந்த பொருட்கள் தீக்கிரையானதுடன் வீட்டின் கூரைகள் சேதமாகியுள்ளது. 

தீப்பற்றிய நேரத்தில் வீட்டில் யாரும் இருக்கவில்லை என்பதுடன் தீப்பற்றிய வீட்டின் தீயை அணைக்க அயலவர்கள் போராடி தீயணைப்பை மேற்கொண்டதுடன் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியின் துரித நடவடிக்கையின் பயனாக விரைந்து வந்த கல்முனை மாநகர தீயணைப்பு வாகனமும் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. 

தீயினால் வீட்டின் பொருட்கள் முற்றாக சேதமாகியதுடன் வீட்டின் கூரையும் அழிவடைந்துள்ளது.
உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படாத நிலையில் கல்முனை தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளின் துரித நடவடிக்கையால் தீ மேலதிக இடங்களுக்கு பரவாமல்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.