சிங்கள மொழி பாடநெறியினைப் பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
(எம்.ஐ.அப்துல் நஸார், எம். பஹத் ஜுனைட்)
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியனைப் பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (02) ஆரையம்பதி நந்தகோபால் மண்டபத்தில் நடைபெற்றது.
மேற்படி நிறுவனத்தின் மட்டக்களப்பு மத்தி வலயத்தின் இணைப்பாளர் ஏ.எல்.எம்.றிஸ்வி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி பஸ்மிலா ரவிராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்
இந் நிகழ்வில் இணைப்பாளர் திருமதி கல்யாணி தங்கராஜ், மண்முனைப்பற்று பிரதேச சபை செயலாளர் சர்வேஸ்வரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இதன்போது, பாடநெறினைப் பூர்த்தி செய்த 41 அரச உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (NILET) 2007 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு மொழி கல்வி மற்றும் பயிற்சியினையும் வழங்கி வருகின்றது.
இந் நிறுவனத்தில் உரைபெயர்ப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பாடநெறிகள் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
Post a Comment
Post a Comment