எல்லோருக்கும்_அவசியமானதும்_முக்கியமானதும். #உறுதி #அரச_உறுதி_LDO #உறுமய_உரித்து #பூரண_அளிப்புப்பத்திரம் #மாற்றக்கூடிய காணிகள்
காணியினை இரண்டு விதமாக பிரிக்க முடியும். அதில் முதலாவதாக #தனியார்_காணி இரண்டாவதாக #அரச_காணி.
பொதுவாக தனியார் உறுதிகள் காணப்படும் காணிகளை விற்கவோ வாங்கவோ எந்தவொரு சட்டக் கட்டுப்பாடுகளும் கிடையாது என்பதுடன் எந்தளவு விசாலம் கொண்ட காணியினையும் நன்கொடை அல்லது அறுதி உறுதிகள் மூலம் பரிமாற்றிக்கொள்ள முடியும்.
அரச காணிகளுக்காக காணி ஆணையாளர் நாயகத் திணைக்களத்தால் வழங்கப்படும் உத்தரவு பத்திரங்கள் (பேர்மிட்) உள்ள காணித்துண்டுகள், நில அளவைத் திணைக்களத்தால் அளவை செய்யப்படுமிடத்து அவை காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் (LDO) அளிப்பு பத்திரங்கள் பெறத்தகுதியானவை. எனினும், இதுவரை காலமும் கௌரவ ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அளிப்பு பத்திரங்கள் முக்கியமான 07 நிபந்தனைகளை உள்ளடக்கி காணப்பட்டன.
அதில், தனி நபரொருவர் ஆகக் குறைந்த பிரிபடக் கூடிய அளவான (பெரும்பாலும் 05 பேட்சஸ் ஆகும்) காணியினை சேமித்து வெத்துக் கொண்டு மிகுதியை மாத்திரம் கைமாற்றல், அல்லது வேறு ஏதாவது மாற்றுக்காணி இருந்தால் மாத்திரம் கைமாற்றல், கைமாறும் பொழுது GS, DS என்பவர்களின் அனுமதியுடன் கைமாறல், இரத்த உறவுகளுக்குல் மாத்திரம் கைமாறல் மற்றும்
நன்கொடை உறுதிகள் மூலமாக மாத்திரம் கைமாறல் என்பன முக்கியமானவையாகும்.
எனினும், கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இனிமேல் மேற்சொன்ன நிபந்தனைகள் அற்ற அதாவது பூரண அளிப்பு பத்திரம் வழங்கும் திட்டம் அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக நாடளாவிய ரீதியில் 10000 நிபந்தனைகளற்ற பூரண அளிப்பு பத்திரம் வழங்கும் வைபவம் எதிர்வரும் 2023.02.05ம் திகதி தம்புளையில் இடம் பெற இருக்கின்றது. அதில் சுமார் 2000 அளிப்பு பத்திரங்கள் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்றன. அதிலும் சம்மாந்துறைக்கு 700 அளிப்பு பத்திரங்களும், திருக்கோவிலுக்கு 600 அளிப்பு பத்திரங்களும் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக இவ் அளிப்புப் பத்திரங்கள் மூலம், விற்கவோ வாங்கவோ எந்த சட்டக்கட்டுப்பாடும் கிடையாது என்பதுடன் எந்தளவு விசாலம் கொண்ட காணித்துண்டுகளும் நன்கொடை அல்லது கிரய உறுதிகள் மூலம் கைமாறிக்காெள்ளலாம். இதில் மிக முக்கிய விடயம் யாதெனில் இவ்வைகையான அளிப்புக்களை GS மற்றும் DS ஆகியோரின் அனுமதியின்றி கைமாறிக்கொள்ளலாம். உதாரணமாக கோடிக்கணக்கில் கைமாறப்பட்ட கடை நிலங்களுக்கு கூட எதிர்வரும் காலங்களில் சட்டரீதியான உறுதி பெற முடியும்.
மேலும், முன்னர் வழங்கப்பட்ட அளிப்புப் பத்திரங்களை உறுமய திட்டத்தினுள் உள்வாங்கும் நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்படலாம்.
எனினும், அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 2000 நிபந்தனைகளற்ற பூரண அளிப்பு பத்திரங்களில் சுமார் 1600ற்கும் மேற்பட்ட ஆவணங்கள் கல்முனை காணிப்பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ் 1600 ஆவணங்களும் 2024.02.01ம், 02ம் திகதிகளில் பதிவு நடவடிக்கைக்காக சமர்பிக்கப்பட்டு அனைத்து ஆவணங்களும் 2024.02.03ம் திகதி உரிய உரிய பிரதேச செயலகங்களிடம் கையளிக்கப்பட்டது.
குறிப்பாக கல்முனை காணிப்பதிவக காணிப்பதிவாளர் திரு.சிவசுந்தரம் சுசிகரன் அவர்களின் தலைமையில் காணிப்பதிவக அனைத்து ஆண் மற்றும் பெண் உத்தியோகத்தர்களும் இரவு வேளையிலும் கடமைபுரிந்து பதிவு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
அப்துல் பாசித்.
காணிப்பதிவகம் - கல்முனை.
Post a Comment
Post a Comment