இணைந்த கரங்கள் அமைப்பினால் கிளிநொச்சி பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைப்பு.
நூருல் ஹுதா உமர்
இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இன்று பாடசாலை அதிபர் ஜெயலட்சுமி மாணிக்கவாசகம் தலைமையில் பாடசாலையின் மண்டபத்தில் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான எல். கஜரூபன், எம். காந்தன், ஆர். ஜெகனாதன், அவுஸ்ரேலியாவில் இருந்து வருகைதந்த தி. ஜெயந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இப்பாடசாலை தேசிய சுற்றாடலுக்கான "சுவசர தக்சலாவ" ஜனாதிபதி விருதினை தொடர்ச்சியாக 2015, 2016, 2017 என மூன்று முறை பெற்றுள்ளதுடன் பொலித்தீன் அற்ற பாடசாலையாகவும் காணப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.
[7:05 pm, 25/02/2024] Rep/NoorulWhatsup: நற்பிரஜைகளாக திகழ கல்வியோடு சமூக சிந்தனையும் அவசியம் : இளைஞர்கள் மத்தியில் எஸ்.எம். சபீஸ்.
நூருல் ஹுதா உமர்
இளைஞர்கள் கல்வி கற்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு நேரம் கிடைக்கும் வேளைகளில் சமூகப் பணிகளிலும் சமூக சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என கிழக்கின் கேடயத்தின் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.
மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோன்று சமூக சிந்தனையும் முக்கியமாகும். காரணம் ஒரு சிலர் இனவாதத்தையும், மற்றவர்களை குறைகூறி மக்களை முட்டாளாக்கி அதிகாரத்துக்கு வருகின்றார்கள். அவ்வாறு வந்தவர்களால் எமது சமூகம் எந்தவேளையிலும் முன்னேறவில்லை.
அதனால் நாம் ஒட்டுமொத்த சமூகமும் அறிவார்ந்த சமூகமாக முன்னேற தேவையான திட்டங்களையும், எமது இளைஞர்கள் புதிய தொழில் முயற்சியாளர்களாக வளரக்கூடிய வழிவகைகளையும், நமது மக்களின் ஏற்றத்தாழ்வினை சீர்செய்யக்கூடிய பொருளாதார திட்டங்களையும், அவர்களின் வாழ்வியல் உறுதிப்பாட்டிற்கான வழிவகைகளையும் எவ்வாறு முன்கொண்டு வரலாம் என்ற சிந்தனையோடு கல்வி பயிலுங்கள் நிச்சயம் எமது சமூகமும், நாடும் முன்னேறும் என தெரிவித்தார்
Post a Comment
Post a Comment