(எஸ்.அஷ்ரப்கான்,ஏ.எம். அஜாத்கான்)
வியாங்கல்லை கிறீன் லைன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அணிக்கு 07 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் அன்மையில் வியாங்கல்லை மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியிலே களுத்துறை வுளூஸ் அணியினரை எதிர்த்து கொழும்பு ஸ்மாஸ் அணி மோதியது.
இதில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் களுத்துறை வுளுஸ் அணி சம்பியனாக தெரிவானது.
சம்பியன் அணிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பணப்பரிசும் கிறீன் லைன் வெற்றிக் கிண்ணமும், 2ம் இடத்தினைப் பெற்ற அணிக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணப் பரிசும் கிண்ணமும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த தொடரின் அதிகூடிய கோல்களை பெற்ற வீரருக்கு பத்தாயிரம் ரூபாயும் கிண்ணமும், சிறந்த கோல்காப்பாளருக்கு பத்தாயிரம் ரூபாயும் கிண்ணமும் ஒழுக்கமான அணிக்கு ஐயாயிரம் ரூபாயும் முறையே வழங்கப்பட்டன.
இறுதி நாள் நிகழ்வுகள் கிறீன் லைன் விளையாட்டுக் கழகத்தின் தவிசாளர், லெப்டினன் ஏ.எம்.எம்.கியாஸின் முழுமையான வழி நடாத்தலுடன் அவரது தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக டாக்டர் எம்.எச்.எம்.றூமி, கெளரவ அதிதிகளாக அல்-ஹாஜ் எம்.எஸ்.எம்.ஜெஸ்லான், முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் அல்-ஹாஜ் இப்திகார் ஜெமீல் மற்றும் கிறீன் லைன் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் வீரர்கள், ஊரின் தனவந்தர்கள் ஊர் மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment
Post a Comment