விசேட சந்திப்பு.




 


கல்முனை யங் பேட்ஸ்  ஜனாஸா நலன்புரி அமைப்புடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளை விசேட சந்திப்பு.


(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை யங் பேட்ஸ்  ஜனாஸா நலன்புரி அமைப்புக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளை நிர்வாகத்திற்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (10) மாலை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளை காரியாலயத்தில் இடம் பெற்றது.

கல்முனை யங் பேட்ஸ்  ஜனாஸா நலன்புரி அமைப்பின் இவ் உயரிய சேவைக்கு ஆதரவு வழங்கி, ஊக்குவிக்கும் நோக்கில்  இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, ஜனாஸா நலன்புரி சேவை வாகன கொள்வனவுக்கான ஒரு தொகை நிதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளை உயர்பீடத்தினரால் ஜனாஸா நலன்புரி அமைப்பினரிடம் ஸகதாவாக கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கல்முனை கிளை தலைவர் மெளலவி ஏ.எல்.எம் முர்ஷித் (முப்தி),  செயலாளர் மெளலவி எம்.எச்.எப்.எம்.  ரஹ்மத்துல்லாஹ், பொருளாளர் மெளலவி எம்.ஐ.எம்.ஆஸிக் அலி,   உப தலைவர் மெளலவி கே.எல்.எம்.சியானுடீன் (முப்தி), செயற்குழு உறுப்பினர்களான மெளலவி ஐ.எல்.நஸீர், மெளலவி ஏ.எம்.றஸீன், மெளலவி எச்.எம். ஆஸிப்  
ஆகியோரும் கல்முனை யங் பேட்ஸ்  ஜனாஸா நலன்புரி அமைப்பின்  தலைவர் எம்.எம்.மர்சூக் தலைமையில், செயலாளர் எம்.வை.பாயிஸ், பொருளாளர் எம்.எச்.எம்.நியாஸ், 
உப தலைவர் எஸ்.அஷ்ரப்கான்,
உப செயலாளர் மிப்றாஸ் மன்சூர்,  உட்பட அமைப்பின் அங்கத்தவர் களும் கலந்து கொண்டனர். 

இங்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  கல்முனை கிளை தலைவர் முர்சித் முப்தி உரையாற்றும்போது,

இஹ்லாசான எண்ணத்துடன் எமது இந்த சேவையை செய்து வருகின்றபோது சகல தேவைகளையும் இறைவன் பூரணமாக்கி தருவான் என்றும் மிகச் சிறப்பான இந்த சேவைக்கு எங்களால் ஆன சகல ஒத்துழைப்புகளையும் தருவோம் என்றும் அது போன்று,  அமைப்புக்கு இருக்கின்ற தேவைகளை நிவர்த்தி செய்ய  எங்களுடைய முழு பங்களிப்பையும் செய்வோம் என்றும் குறிப்பிட்டார்.