அம்பாரை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற பெண்களின் வில் கிளப் (WILL Club) அமர்வு





வி.சுகிர்தகுமார் 0777113659 



 சேர்ச் போ கொமண்ட் கிறவுண்ட் ((Search for Common Ground)  நிறுவனத்தின் அனுசரணையில் அம்பாரை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற பெண்களின் வில் கிளப் (WILL Club) அமர்வானது அம்பாரையிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று (28) நடைபெற்றது.
சேர்ச் போ கொமண்ட் கிறவுண்ட் நிறுவனத்தின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுக்கான சிரேஸ்ட முகாமையாளர் எம்.ஜ.எம்.சதாத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திட்ட இணைப்பாளர் கமலவாணி சுதாகரன், அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் திரு.கமால் நேத்மினி, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன், கல்முனை பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர், ஏசிஏ.அசீஸ்;, தேசிய அபாயகர ஒளடதங்கள் ஆணைக்குழுவின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் எஆ.றசாட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சம ;மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான எம்.எம்.ஜி.பி.நௌசாட், மற்றும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் பெண் உறுப்பினர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்
சேர்ச் போ கொமண்ட் கிறவுண்ட் நிறுவனம் கடந்த 04 வருடங்களாக அம்பாரை மாவட்ட உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை வலுப்படுத்தி இப்பெண்களுக்கான தனித்தளமாக 'வில் கழகம்' ஒன்றினை உருவாக்கியதுடன் இவர்களுக்கு உதவியாக பலதரப்பட்ட பங்குதாரர்கள் குழு ஒன்றினையும் அமைத்து இயங்கி வருகின்றது.
இன்றைய வில் கழக அமர்வில் உள்ளுராட்சி மன்ற பெண் தலைவிகளால் எழுதப்பட்ட திட்ட முன்மொழிவுகளின் செயற்பாடுகள் பற்றியும், இச்செயற்பாடுகளினால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள்; அவற்றைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வழிமுறைகள், திட்ட செயற்பாடுகளை செயற்படுத்தும் போது பலதரப்பட்ட பங்குதாரர் குழுவிடமிருந்து பெற்றுக் கொண்ட உதவிகள் பற்றியும் தெளிவு படுத்தப்பட்டது.
அத்தோடு உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கும் பலதரப்பட்ட பங்குதாரர் குழுவினர்களுக்குமிடையில் கலந்துரையாடலும் நடைபெற்றது.
மேலும் வில் கழகத்தை மாவட்ட ரீதியில் பதிவு செய்வதற்கு தேவையான வழிமுறைகள் பற்றி அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் கே.எம்.இர்பான் கலந்து கொண்டு தெளிவுபடுத்தினார்.
இதேநேரம் வில் கழகத்திற்கான புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.