*ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்றின் சத்திர சிகிச்சைக் கூடத்திற்கு அதிநவீன Ultrasonic dissector உபகரணம் வழங்கிவைப்பு*
எமது வைத்தியசாலை சத்திரசிகிச்சைக் கூடத்தின் மிக நீண்டகால தேவையாக இருந்த
அல்ட்ராசோனிக் டிசெக்டர் உபகரணம் (Ultrasonic dissector) இன்று (11.01.2024) எமது வைத்திய அத்தியட்சகர் *Dr.TSRTR. Rajab* அவர்களினால் வைத்திய நிபுணர்களிடம் உத்தியோகபூர்வமாக
கையளிக்கப்பட்டது.
எமது நாட்டின் தற்போதய நெருக்கடியான நிலமையில், *9.5 million* ரூபா பெறுமதியான இவ் உபகரணம் எமது வைத்திய அத்தியட்சகரின் அயராத முயற்சியினால் சுகாதார அமைச்சிடம் இருந்து பெற்றுக் கொண்டமை விஷேட அம்சமாகும். அத்துடன் கமரா தொழிநுட்பமுடன் கூடிய சத்திர சிகிச்சைகளிற்கு (Laparoscopic surgery) இவ் உபகரணம் மிகவும் பயனுறுதியுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment