( வி.ரி. சகாதேவராஜா)
நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் நட்ட நடுநிசியில் டீசல் இல்லாமல் புணானை நடுக்காட்டுப் பகுதியில் நின்றது.
யானைப்பயத்தில்பயணிகள் பதட்டம் அடைந்தார்கள் . தவித்தார்கள்.
இச் சம்பவம் இன்று(17) புதன்கிழமை அதி காலை மூன்று முப்பது மணி அளவில் புண்ணையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (16)பத்து முப்பது மணி அளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பை நோக்கி புறப்பட்ட இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ் நடுக்காட்டில் டீசல் இல்லாமல் நின்றுவிட்டது.
பயணிகள் பதட்டம் அடைந்தனர்..
சற்று நேரத்தில் அவ்வழியில் வந்த ஒரு லொறியில் இருந்து 10 லிட்டர் டீசலை கடனாக பெற்று அதன் பின்னர் வாழச்சேனைக்கு வந்து வாழைச்சேனை டிப்போவில் டீசல் நிரப்பிய பின் காலை 6 மணி அளவில் மட்டக்களப்பை வந்து அடைந்தது .
நீண்ட தூரபஸ் பயணத்தின் போதுசாரதி நடத்துனர்கள் எரிபொருள் கொள்ளளவு நிலைமையை உறுதிப்படுத்தாமல் பயணிகளை இப்படி நட்ட நடுநிசியில் நடுக்காட்டில் தவிக்க விட்டமை பாரதூரமானதாகும் என்று பயணிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சேவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கேட்டுக்கொண்டனர்.
Post a Comment
Post a Comment