சேவை வழங்குனர்களுக்கான செயலமர்வு






(நூருல் ஹுதா உமர்)

அம்பாரை மாவட்டத்தில் காதிமன்றங்கள் அமைந்துள்ள 08 பிரதேசங்களிலும் பிரதேச மட்ட குடும்ப நல்லிணக்க சபை அமைத்து அதனூடாக முஸ்லிம் விவாக விவாகரத்து தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகள் ஆராயப்பட்டு அவற்றுக்கான உரிய முறையில் சரியான வழிகாட்டல் ஆலோசனை சேவைகள் மற்றும் இணக்கப்பாடுகளை பெற்றுக்கொடுப்பதன் மூலமாக காதி நீதிமன்றங்களின் சேவைகளை இலகுபடுத்துவதோடு ஏனைய சேவை வழங்குனர்களின் பங்கேற்புடன் நிலைபேறான வினைத்திறனான சேவைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் செயலமர்வு இறக்காமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் (08) திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.



 வழங்கப்பட்டு இறக்காமம் பிரதேசத்திற்கான சபை தெரிவுசெய்யப்பட்டது. மேலும் அவற்றின் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுரை வழங்கிவைக்கப்பட்டது.


இச்சபையினூடாக, பிரதேசத்தில் தீர்க்க முடியுமான குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காணல் மற்றும் அவற்றுக்கான ஆலோசனைகள் வழிகாட்டல்களை வழங்கல், தீர்க்க முடியாத பிரச்சினைகளை காதி நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லல், திருமணத்திற்கு முன்னரான ஆலோசனைகள், பின்னரான ஆலோசனை சேவைகளை வழங்கல், 
நேரடியாகவோ அல்லது காதி நீதிமன்றங்கள் ஊடாகவோ கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், பிரதேச மட்டத்தில் குடும்ப பிணக்குகள் மற்றும் விவாகரத்து தொடர்பான முறைப்பாடுகளுக்கு விரைவாக நல்ல தீர்வினை பெற்றுக்கொடுப்பதே இக் கட்டமைப்பின் நோக்கமாகும்.

குறித்த செயலமர்வில் காதி நீதவான் சட்டத்தரணி எஸ்.எல். பாறூக், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் உட்பட பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதான ஜும்ஆ பள்ளிவாசல் பிரதிநிதிகள், பிரதேச திருமண பதிவாளர்கள், ஜம்மியதுல் உலமா சபை, கிராம சேவை உத்தியோகத்தர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்