தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் இரண்டாவது நாளாகவும் சுத்திகரிப்பு பணி! உதவிக்கு விரைந்தது அக்கரைப்பற்று மாநகரசபை!
நூருல் ஹுதா உமர்
அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கின் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் சில பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. இதில் பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தன.
மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 22.01.2024 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தலைமையில் இரண்டாது நாளாகவும் சுத்திகரிக்கும் நிகழ்வு இன்றும் இடம்பெற்றது.
இன்றைய சுத்திகரிப்புப் பணியில் அக்கரைப்பற்று மாநகரசபையின் தீ அணைப்பு பிரிவும் இணைந்து கொண்டது. இன்றைய நிகழ்வில் பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்த்தவ தேவாலயங்கள் ஊழியர்களால் சுத்தம் செய்யப்பட்டன.
உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கருடன் நூலகர் எம்.எம்.றிபாவுட்டீன் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், அரபு மற்றும் இஸ்லாமிய பீடத்தின் பீடாதிபதி எம்.எச்.ஏ. முனாஸ், வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.சபீனா எம்.ஜி.எச்., பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, வேலைப்பகுதி பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸில், மற்றும் பேராசிரியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர் சங்க தலைவர் எம்.ரீ.எம். தாஜுதீன், செயலாளர் எம்.எம். முஹம்மட் காமில் உள்ளிட்ட பலரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
சுத்திகரிப்புப் பணிகள் இடம்பெற்றுவரும் அதேவேளை சேதங்கள் தொடர்பில் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டால் கையாளவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் கருத்து வெளியிட்டார். அத்துடன், சேதங்கள், மீள் கட்டுமானம் மற்றும் எதிர்கால அனர்த்த தவிர்ப்பு திட்டவரைபுகள் தொடர்பிலும் விரைவில் சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் சுத்திகரிப்பு பணிகளில் இன்றும் மிகுந்த சிரத்தையுடன் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment