அரசாங்கமும் தனியார் அமைப்புக்களும் இணைந்து மக்களுக்கு தேவையான உலர் உணவுப்பொதிகளை வழங்கி வருகின்றனர்.இதற்கமைவாக சமூக சேவை திணைக்களத்தால் வழங்கப்பட்ட உலர் உணவுப்பொதிகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இன்று (14) பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யுடி வீரசிங்கவின் இணைப்பாளர் வசந்த கலந்து கொண்டு உலர் உணவுப்பொதியை வழங்கி வைத்தார்.
இதன்போது பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கிந்துஜா பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயவாணி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கிராம உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதேநேரம் உள்நாட்டு வெளிநாட்டு தனவந்தர்களின் நிதியுதவியுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட உலர் உணவுப்பொதிகளை ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பு மற்றும் கனடா வாழ் அக்கரைப்பற்று மக்கள் ஒன்றியம் உள்ளிட்ட சமூக அமைப்புக்களும் பிரிவு ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைத்தனர்.
இதேநேரம் ஆலையடிவேம்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6412 குடும்பங்களுக்கும் அரசிடம் இருந்து நிவாரணம் பெற்றுக்கொடுக்க பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதேச செயலாளர் கூறினார்.
Post a Comment
Post a Comment