பொங்கல்பொதிகளடங்கிய பானையுடன் சமைத்த உணவை வழங்கிய சுவிஸ் விஜி





( வி.ரி.சகாதேவராஜா)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொங்கல்பொதிகளடங்கிய  பானையையும் மதிய போசனத்தையும் சுவிட்சர்லாந்தில் வாழும் திருமலை ஆசிரியை திருமதி விஜயகுமாரி மகேசன் இன்று வழங்கி வைத்தார்.

வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட காரைதீவு பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய கண்ணகி கிராமத்தில் இந்த உதவிப்பொருட்கள்  பொங்கலுக்கு முதல்நாளான  இன்று(14) ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் 1991/ 92  விஞ்ஞானஅணியில் பயின்ற திருமலை கோபாலபுரத்தைச் சேர்ந்த திருமதி விஜயகுமாரி மகேசன் இதற்கான நிதியுதவியை வழங்கியிருந்தார்.

 இதனை கலாசாலையின் புலன அணித்தலைவர் வி.ரி. சகாதேவராஜா மற்றும் பிரபல சமூக செயற்பாட்டாளர் காரைதீவு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்  இணைந்து இதனை ஏற்பாடு செய்து வழங்கி வைத்தார்கள்.

 அரிசி சீனி பேரித்தம் பழம் உள்ளிட்ட பொருட்களுடன் பொங்கல் பானைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது .

கூடவே அவர்களுக்கான மதிய போசனமும் வழங்கப்பட்டது .

கண்ணகி கிராமத்தில் வாழும் மக்கள் புலம்பெயர் தேசத்தில் வாழும் சுவிஸ் விஜி தம்பதியினருக்கு  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.