தோஹாவில்,உலக நீர்வாழ் சம்பியன்ஷிப்




 


உலக நீர்வாழ் சம்பியஹ்ஷிப் போட்டி பெப்ரவரி 2 முதல் 18 வரை கட்டார் தலைநகரான தோஹாவில் நடைபெறவுள்ளது, இதில் உலகெங்கிலும் உள்ள 190க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்குபற்றுகின்றனர்.

 

உலகக் கிண்ண உதைபந்தாட்டம், ஃபார்முலா 1, Moto GP, முக்கிய டென்னிஸ் மற்றும் கோல்ஃப் போட்டிகள் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்திய கட்டாரில் முதன் முதலாக உலக நீர்வாழ் சம்பியன் ஷிப் போட்டி நடைபெற உள்ளது. 2027 ஆம் ஆண்டு உலக கூடைப் பந்துப் போட்டியை நடத்த கட்டார் தயாராகவுள்ளது.


சமீபத்திய ஆண்டுகளில், 2022 FIFA உலகக் கிண்ணம், ஃபார்முலா 1, Moto GP, முக்கிய டென்னிஸ் மற்றும் கோல்ஃப் போட்டிகள் மற்றும் வரவிருக்கும் 2027 உலக கூடைப்பந்து சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை நடத்துவதில் தோஹா புகழ் பெற்றுள்ளது.