சிங்கள கற்கைநெறி ஆரம்பம்!





 (வி.ரி.சகாதேவராஜா)


அரச கரும மொழிகள் திணைக்களத்தால் நடாத்தப்படுகின்ற 150 மணித்தியாலங்களைக் கொண்ட சிங்கள கற்கை நெறிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு சம்மாந்துறையில் நேற்று முன்தினம் (8) திங்கட்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வு சம்மாந்துறை அல்அர்சத் மகாவித்தியாலயத்தில் அதிபர் எம் அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்றது.

வலய சிங்கள பாட வளவாளர் நாசிக் அஹமத் இணைப்பாளராக செய்யப்பட்டார்.

 பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா, கௌரவ அதிதியாக உதவிக் கல்விப்  பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

 சிங்கள கற்கை நெறியின் விரிவுரையாளர் ஜெயசிங்க கலந்து கொண்டு இரு மொழிகளிலும் உரையாற்றினார்.

 சம்மாந்துறை வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முகாமைத்துவ உதவியாளர்கள் என்று 100 பேர் இந்த 150 மணி நேர பயிற்சி நெறியில் கலந்து கொள்கின்றனர்.