அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்சமயம் கல்முனை நீதிமன்ற கௌரவ நீதிபதியாகத் தொழிற்படுகின்றவருமாக, கௌரவ நீதிபதி முஹம்மமது செரிப் முஹம்மது சம்சுதீன் அவர்கள் கொழும்புப் பல்கலையின் சட்ட முதுமாணிப் பட்டத்தனைப் பெற்க் கொண்டார்.
அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லுாரியின் பழைய மாணவரான இவர் கொழும்புப் பல்கலையின் யுனாணி கற்கை நெறியில் BUMS பட்டம் பெற்றவர் என்பதுடன் , சட்டக்கல்லுாரியில் இருந்து சட்டத்தரணியாக வெளியேறி அக்கரைப்பற்றறு நீதிமன்றில் ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக சட்டத்தரணியாக ஜொலித்திருந்தார்.
நீதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட இவர், முவ்லைத்தீவு,மூதுார்,போன்ற பிரதேசங்களில் கடமையாற்றி, தற்சமயம் கல்முனை நீதிபதியாக நீதியை நிலைறாட்டி மக்களுக்கக நீதி வழுவாது செயற்படுகின்றார்.
இவர் காது, மூக்குத் தொண்டை வைத்திய நிபுணர் - மனாப் ஷெரிப் மற்றும் பொறியியலாளர் - ஷெரிப் அமீன் அவர்களின் சகோதரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நீதிபதியாகத் தொழிற்படும் இவர், இனிவருங் காலத்தில் நீதியரசராகவும் பதவி உயர நாமும் வாழ்த்துகின்றோம்.
Post a Comment
Post a Comment