இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் ஏறு தழுவுதல் என்ற பெயரில் நடத்தப்பட்டது.
தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன், இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக தமிழகத்தில் இருந்து ஜல்லிக்கட்டு வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர்.
சம்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போட்டியில், சுமார் 200 காளை மாடுகள் பங்கு பெற்றன.
இலங்கையில் ஜல்லிக்கட்டு நடத்தி வரலாற்று சாதனை!
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள கலாசார விழா திருகோணமலையில் இன்று இனிதே ஆரம்பமானது.
இதன் ஓர் அங்கமாக திருகோணமலை சம்பூர் மைதானத்தில் 250 காளைகள் மற்றும் 150 வீரர்களின் பங்களிப்புடன் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு இலங்கை வரலாறறில் முதல் முறையாக திருகோணமலை சம்பூரில் பிரதேசத்தில்
இன்று (06) நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் முயற்சியில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள்
தமிழருடைய பாரம்பரிய விழுமியங்களுடன் இடம்பெற்றதும், தமிழ் நாட்டைத் தாண்டி வேறு ஒரு நாட்டில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் ஶ்ரீ முருகன் மற்றும் நடிகர் நந்தா, சிறப்பு விருந்தினர்களாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் ஒண்டிராஜ், செயலாளர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டதுடன் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த விசேட அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்த்தின் வழிகாட்டலில் இந்த ஜல்லிக்கட்டு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பெறுமதி மிக்க பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.
Post a Comment
Post a Comment