(வி.ரி. சகாதேவராஜா)
புத்தாண்டில் அரச கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் இன்று(1) திங்கட்கிழமை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தலைமையில் நடைபெற்றது.
முதலில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அடுத்து நாட்டுக்காக உயிர்நீத்த அனைவருக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது .
பின்பு அலுவலர்களுக்கான சத்தியபிரமாண உறுதி உரையை நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் பி. எம்.யாசீர் அரபாத் நிகழ்த்தினார் .
அதை தொடர்ந்து பிரதான உரையை "வலுவான எதிர்காலத்திற்கான தொடக்க உரை" .. என்ற மகுடத்தின் கீழ் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வை நெறிப்படுத்தி உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தொகுத்து வழங்கினார்.
கொட்டு மழைக்கு மத்தியில் இந்த நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment