(எஸ்.அஷ்ரப்கான்)
சாய்ந்தமருது பிர்லியன்ட் கல்லூரியின் முன்பள்ளி பட்டமளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சி சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்றது.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு, கடந்த 10 வருடங்களாக இயங்கிவரும் இக்கல்லூரியில் இருந்து 2023 ஆம் கல்வியாண்டில் முன்பள்ளி பாடநெறியைப் பூர்த்திசெய்த 120 மாணவர்கள் முதலாம் தரத்திற்கு பாடசாலை செல்கின்றனர்.
பாடசாலை பொறுப்பாசிரியை ஏ.சி.சாமிலா பானு தலைமையில் நடைபெற்ற சான்றிதழ், நினைவுச் சின்னம், பதக்கம் அணிவித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகளில், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்.சஹிலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாடத்திட்டத்தின் பிரகாரம் தொழிற் திறன் விருத்தி, சுய மற்றும் சமூக விருத்தி, தொடர்பால் விருத்தி, படைப்பாற்றல் மற்றும் நுன்கலை திறன் அத்துடன் பகுப்பாய்வு மற்றும் முரண்பாடுகளைத் தீர்த்தல் திறமை ஆகிய ஐந்து பிரிவுகளை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தமைக்காக இப்பணியகத்தினால் வழங்கப்பட்ட விஷேட சான்றிதழ்கள் இந்த மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிர்லியன்ட் கல்லூரியின் 10 வருட நிறைவையொட்டி புதிதாக வடிவமைக்கப்பட்ட மாணவர் சீருடை கல்லூரியின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.றபீக் மற்றும் செயலாளர் எஸ்.லியாக்கத் அலி ஆகியோரால் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. அத்துடன் இக்கல்லூரியின் வளர்ச்சியில் தொடர்ந்தும் பங்களிப்புச் செய்துவரும் முகாமைத்துவ குழுவினர், ஆசிரியைகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை நிகழ்வின் விஷேட அம்சமாக அமைந்திருந்தது
Post a Comment
Post a Comment