மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் வாவியில் மீன்பிடிக்கச் சென்ற கிழக்கு பல்கலைக்கழக மாணவன் இன்று (13) காலை சனிக்கிழமை காணாமல் போயுள்ளாதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தகப்பனாரும்,மகனும் மீன் பிடித்துக்கொண்டிருந்த சமயம் தோணி ஆற்றினுள் கவிழ்ந்த நிலையில் தகப்பனார் தெய்வாதீனமாக உயிர்தப்பியதுடன் மகன் ஆற்றில் காணாமல் போயுள்ளார்.
இதேவேளை நீரில் மூழ்கிய களுவாஞ்சிகுடி மகிழூர் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய கிழக்கு பல்கலைக்கழக மாணவன் தி.தனுஷன் எனவும் தெரியவருகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸார் காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது..
Post a Comment
Post a Comment