அக்கரைப்பற்றிலும், அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில், இன்றைய தினம் சட்ட ரீதியிலான நாம்பன் மாடுகளை அறுத்த 3 கடைகள் மாத்திரமே 2024.1.13 ந் திகதி இன்று சனிக்கிழமை திறந்திருந்தன.
அண்மையில், கசாப்புக் கடை, மிருக வதைச் சட்டத்தின் விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக விசேட பொலிஸ் பிரிவினர் வழக்குத் தொடர்ந்ததன் அடிப்படையில், சில இறைச்சிக் கடைக்காரர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தன. தண்டப் பணம் விதிக்கப்பட்டு, பெட்டை மாட்டிறைச்சிகள் அக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீதிபதி றிஸ்வான் அவர்களின் கட்டளைக்னு அமைவாக அவரது மேற்பார்வையில் அக்ரைகப்பற்று கடற்கரைக்கு அண்மையில் புதைக்கப்பட்டன.
Post a Comment
Post a Comment