எஸ்.அஷ்ரப்கான்)
2024 ஆம் ஆண்டுக்கான சிறீ லங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சி.எம்.மழ்ஹர்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை அக்கட்சி வெளியிட்டது.
2024ஆம் ஆண்டுக்கான கட்சியின் ஏனைய செயற்குழு உறுப்பினர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் அறிவிக்கப்படும் என புதிதாக தெரிவு செய்யப்பட்ட கட்சித் தலைவர் சீ.எம். மழ்ஹர்தீன் தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடும்போது,
சவூதி அரேபியாவில் இருந்து இணையம் மூலம் கட்சியின் தேசிய பொதுக்குழுவில் பங்கேற்று கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் அனைவரினதும் ஆதரவுடன் புதிய தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரது உடன்பாட்டுடன் கட்சியின் புதிய தலைவராக செயல்படுவேன்.
உண்மையான நேர்மையான மற்றும் வெளிப்படையான அரசியலை செய்து முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும் மழ்ஹர்தீன் மௌலவி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment